நிலை - 5
வயது வரம்பு: குறைந்த பட்சம் 8 வயது.
Age Requirement: Minimum 8 years old
தகுதி: அ த க நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.
Pre-requirements: 7+ years, should have completed grade 4
நோக்கம்: உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல். அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல். ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.
Aim: Be able to read and understand prose. Understand basic grammar, Translate from Tamil and to Tamil.
மொழித்திறன்: வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல். மொழி மாற்றம் செய்தல்; பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல். வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல். திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.
இலக்கணம்: பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல். வினைப்பாகுபாடுகள், பெயரடை, வினையடை, எதிர்மறை வினையச்சம், நிபந்தனைச் சொற்கள் , இயல்பு/விகாரப் புணர்ச்சி, ஒப்பீட்டு அடைகள், தொடர்வினைகள், வினாச் சொற்கள், எழுவாய்/பயனிலை/செயப்பாடு பொருள், தனி மற்றும் கூட்டு வாக்கியங்கள் கலப்பு மற்றும் கதம்ப வாக்கியங்கள், வினா வாக்கியங்கள் , செய்வினை, செயப்பாட்டு வினை, இணைப்புச் சொற்கள்
Course Details: Be able to properly read, write and understand sentences, Translate and understand cultural songs, Compare and learn words, sentences and grammar, with English. learn,understand and recite thirukkural with its meaning. Learn the following parts of grammar, Verb classes, adjective, adverb, negative infinitives, conditional words, compound words, positive, comparative and superlatives degrees, continuous tense, interrogative words, subject, predicate and object, simple and compound sentences, active, passive voices, conjunctions