நிலை 3 ஆசிரியர்கள்
ரஜினி ராமகிருஷ்ணன்நான் கோப்பல் தமிழ் கல்வி மையத்தில் கடந்த எட்டு வருடமாக தமிழ் கற்பித்து வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. எனக்கு சிறுவயது முதலே தமிழ் ஆர்வம் மிக உண்டு. என் தாய்மொழி தெலுங்கு ஆக இருந்த போதிலும் என் உணர்வுகளின் மொழியாக தமிழ் அமைந்ததிற்கு இந்த தமிழ் ஆர்வமும் ஒரு காரணம். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் திரு.கல்கி, திரு.அகிலன், திரு.நா.பார்த்தசாரதி, திரு.கி.இராஜநாராயணன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் திரு.கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" . |
|
ஹேமலதாநான் கோப்பல் தமிழ் கல்வி மையத்தில் கடந்த இரண்டு வருடமாக தமிழ் கற்பித்து வருகிறேன். |
|
ரெங்கராஜன்என் பெயர் ரெங்கராஜன் பார்த்தசாரதி. நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2022 ஆண்டு முதல் ஆசிரியராக உள்ளேன். என் பள்ளி பருவம் தொட்டே தமிழ் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகம் எனக்கு இருந்து வருகிறது. இம்மையத்தில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எனக்கு மிக மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கிறது . புராணம் புகழும் அமுதின் நிறம் அறியேன் !!! இருந்தும் எம்மொழி பேசி அவ்வமுதின் சுவை அறிந்தேன்!!! |
|
சுதர்சனா தேவிநான் 2024 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். |