தகுதி: அ த க நிலை 4 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே வாக்கியங்கள் படித்து புரிந்து கொள்ளுதல்; வாக்கியங்கள் எழுதுதல், இலக்கண அறிவு (ஒருமை, பன்மை, வினைச்சொல், பெயர்ச்சொல், சுட்டுப்பெயர், கால நிலைகள், வினை வகைகள், மற்றும் எட்டு வகையான வேற்றுமை உருபுகள் அறிதல்) போன்ற திறன்கள் பெற்றிருத்தல்.
நோக்கம்: உரைநடை வாசித்தல், புரிந்து கொள்ளுதல். அடிப்படை தமிழிலக்கணத்தின் புரிதல். ஆங்கிலத்திலிருந்து தமிழுலும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி மாற்றம் செய்தல்.
மொழித்திறன்: வாக்கியங்களைத் தெளிந்த உச்சரிப்போடு பிழையின்றி படித்தல், புரிந்து கொள்ளுதல், எழுதுதல். மொழி மாற்றம் செய்தல்;பண்பாடு மற்றும் இலக்கியம் சார்ந்த பாடங்கள் படித்து தெளிவுபட கருத்துக்களை வெளிப்படுத்தல். வாக்கியங்கள், கருத்துக்கள், வார்த்தைகள் மற்றும் இலக்கணத்தை ஆங்கில மொழியோடு ஒப்பிட்டுப் பயிலுதல். திருக்குறளின் தொன்மை அறிந்து, தெளிவுபடப் படித்து விளக்கம் சொல்லுதல்.
இலக்கணம்: பின் வரும் இலக்கணத்தைப் பாட மற்றும் பயிற்சி நூல்களின் வாயிலாக பயிலுதல். வினைப்பாகுபாடுகள், பெயரடை, வினையடை, எதிர்மறை வினையச்சம், நிபந்தனைச் சொற்கள் , இயல்பு/விகாரப் புணர்ச்சி, ஒப்பீட்டு அடைகள், தொடர்வினைகள், வினாச் சொற்கள், எழுவாய்/பயனிலை/செயப்பாடு பொருள், தனி மற்றும் கூட்டு வாக்கியங்கள் கலப்பு மற்றும் கதம்ப வாக்கியங்கள், வினா வாக்கியங்கள் , செய்வினை, செயப்பாட்டு வினை, இணைப்புச் சொற்கள்.
Age Requirement: Minimum 8 years old.
Pre-requirements: Should have completed grade 4
Aim: Be able to read and understand prose. Understand basic grammar, Translate from Tamil and to Tamil.
Language proficiency: Reading sentences with clear pronunciation and without errors, understanding and writing them. Translating languages. Studying lessons related to culture and literature and clearly expressing ideas. Practicing sentences, ideas, words, and grammar by comparing them with the English language. Understanding the antiquity of Thirukkural, reading it clearly, and providing explanations
Grammar: Studying the following grammar through songs and practice books: verb conjugations, adjectives, adverbs, negative verb moods, conditional words, natural/emotional conjunctions, comparative phrases, relative clauses, interrogatives, subject/object/action meaning, simple and compound sentences, mixed and complex sentences, question sentences, active voice, passive voice, and conjunctions.
சங்கீதா பாலா
நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன்.
அருண் பிரபு
நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2017 முதல் ஆசிரியராக உள்ளேன். என் குழந்தை பருவத்திலிருந்துதே தமிழ் மீது பற்று அதிகம் இருந்தது. எனக்கு சங்க இலக்கியத்தில் ஆர்வம் உண்டு.
நிரோஷா
எனக்கு மிகவும் பிடித்தது கற்று கொடுப்பது. நான் 2023 முதல் நம்முடைய தமிழ் பள்ளியில் விருப்ப ஆசிரியராக முன்வந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் தமிழ் தேனீ குழு மற்றும் cbe குழுவில் உறுப்பினராக இருக்கிறேன்.