Early Bird Student Registration opened for School year 2025-2026 ! Please register from Student->Register link and pay the amount through Zelle.Update the payment information in Student -> Payment link.

Grade-3 / நிலை-3

  • வயது வரம்பு: குறைந்த பட்சம் 7 வயது.
  • தகுதி: அ த க நிலை 2 முடத்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • நோக்கம்: சிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல். சிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல். சொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம். சொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல். ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல். உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல். ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.
  • இலக்கணம்: பெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல். அடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல். கால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.


  • Age Requirement: 7 years old.
  • Pre-requirements: Should have completed grade 2
  • Aim: Read and comprehend small sentences, understand and translate simple stories, be able to pronounce words properly, be able to participate in conversations. Introduction of the culture and literature.
  • Grammar: Nouns, usage of demonstrative letters, and verbs in different tenses. Basic grammar in sentence formation, Change is sentences and its meaning based on tenses. Learn opposites, plurals.

ரஜினி ராமகிருஷ்ணன்

நான் கோப்பல் தமிழ் கல்வி மையத்தில் கடந்த எட்டு வருடமாக தமிழ் கற்பித்து வருகிறேன். இங்கு குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்று. எனக்கு சிறுவயது முதலே தமிழ் ஆர்வம் மிக உண்டு. என் தாய்மொழி தெலுங்கு ஆக இருந்த போதிலும் என் உணர்வுகளின் மொழியாக தமிழ் அமைந்ததிற்கு இந்த தமிழ் ஆர்வமும் ஒரு காரணம். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் திரு.கல்கி, திரு.அகிலன், திரு.நா.பார்த்தசாரதி, திரு.கி.இராஜநாராயணன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் திரு.கல்கி அவர்களின் "பொன்னியின் செல்வன்" .


Thumbnail

ஹேமலதா

நான் கோப்பல் தமிழ் கல்வி மையத்தில் கடந்த இரண்டு வருடமாக தமிழ் கற்பித்து வருகிறேன்.


Thumbnail

ரெங்கராஜன்

என் பெயர் ரெங்கராஜன் பார்த்தசாரதி. நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2022 ஆண்டு முதல் ஆசிரியராக உள்ளேன். என் பள்ளி பருவம் தொட்டே தமிழ் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகம் எனக்கு இருந்து வருகிறது. இம்மையத்தில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எனக்கு மிக மகிழ்ச்சியும் மனநிறைவும் அளிக்கிறது.
புராணம் புகழும் அமுதின் நிறம் அறியேன் ! இருந்தும் எம்மொழி பேசி அவ்வமுதின் சுவை அறிந்தேன் !


Thumbnail

சுதர்சனா தேவி

நான் 2024 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.