Early Bird Student Registration opened for School year 2025-2026 ! Please register from Student->Register link and pay the amount through Zelle.Update the payment information in Student -> Payment link.

Grade-2 / நிலை-2

  • வயது வரம்பு: குறைந்த பட்சம் 6 வயது
  • தகுதி: அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை
  • நோக்கம்: இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.
  • மொழித்திறன்: தமிழ் எழுத்துகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் பகுதியானது நிலை இரண்டிலும், இரண்டாம் பகுதியின் எழுத்துகள் நிலை மூன்றிலும் பயிற்றுவித்தல். ட, ப, ம, ய என எழுதுவதற்கு எளிதான எழுத்துகளில் ஆரம்பித்து படிப்படியாக மற்ற எழுத்துகளும் இந்த நிலையில் பயிலுதல். உயிரெழுத்துகளைத் தவிர, அ & ஆ வரிசை உயிர்மெய் எழுத்துகள், இ & ஈ வரிசை உயிர்மெய் எழுத்துகள், உ & ஊ வரிசை உயிர்மெய் எழுத்துகள் மற்றும் எ வரிசை உயிர்மெய் எழுத்துகளை அறிதல், எழுதுதல். ஒவ்வொரு பாடத்திலும் இந்த எழுத்துகளால் ஆன எளிய பெயர்ச்சொற்கள் படங்களுடனும், வினைச்சொற்களும், அவற்றால் உருவான சிறு சிறு சொற்றொடர்களும் பயிலுதல்.


  • Age Requirement: Minimum six years old
  • Pre-requirements: None
  • Aim: At the end of this level, students will know vowels, consonants, some short stories and songs, along with knowing around hundred tamil words
  • Course Details: Tamil letters will be split into two parts. The first part will be taught in Nilai-2, the second part will be taught in Nilai-3. The letters ட, ப, ம, ய will be taught with small words and will gradually get accustomed to more letters. The அ & ஆ, இ & ஈ, உ & ஊ, and எ rows will be taught. Each lesson will contain nouns, verbs, using letters from these rows.

இந்து

நான் 2010 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறேன். என்னுடைய 7 வயது மகள் இந்த தமிழ் பள்ளியில் தமிழ் கற்று வருகிறாள். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். எனக்கு இசை மற்றும் மண்பாண்ட கலைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. நான் ஒய்வு நேரங்களில் பழைய தமிழ்
திரைப்படங்களை பார்த்து மகிழ்வேன். நான் கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களில் பங்கேற்றியிருக்கிறேன்.


Thumbnail

விவேக் ஜெயபாலன்

என் பெயர் விவேக் ஜெயபாலன். நான் கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தில் 2014 முதல் ஆசிரியராக உள்ளேன். எனது குழந்தைகள் இந்த தமிழ் பள்ளியில் தமிழ் கற்று வருகிறார்கள்.


Thumbnail

மோஹனபிரியா

நான் 2018 முதல் கோப்பல் தமிழ் பள்ளியில் பணியாற்றுகிறேன். என்னுடைய இரண்டு பிள்ளைகளும் இந்த பள்ளியில் படிக்கிறார்கள்.


Thumbnail

காஞ்சனா