தமிழ்க் கற்றலில் உண்மையான விருப்பம் கொண்ட, தமிழ் கற்பதற்கான வசதிகளற்ற மாணவர்களின் தமிழ்க் கல்வியே இம்மையத்தின் இலக்கு.
Updated : We are happy to announce that Coppell Tamil Learning Center is an approved institution of Coppell ISD to obtain two credits for alternative LOTE Credit. These credits will be offered as "Other Foreign Language Level 1 and Level II".
Registration is closed for this year.
Muthukumar Ramalingam
கோப்பல் தமிழ்க் கல்வி மையம், தமிழ் மொழி கற்றலை அனைவருக்கும் கிடைக்கச்செய்ய உருவாக்கப்பட்ட ஒரு கல்விச்சாலை. டல்லாஸ் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் மொழித் திறனை மேம்படுத்த தொடர்ந்து துணைபுரியும் இம்மையம், குழந்தைகளின் அறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் பாடங்களை வடிவமைத்துள்ளது.
தமிழ் மொழியைப் பேச, வாசிக்க, எழுத எனப் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை வழங்குவதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும். படிக்க விரும்பும் மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் அழகு மற்றும் சிறப்புகளை விளக்கி, அவர்களுக்கு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊட்டி, சூழலுக்கேற்ப நேர்த்தியாக கற்பிப்பதையே இம்மையம் முக்கியமாகக் கருதுகிறது.
கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தின் வளர்ச்சியில் உறுதியாகச் செயற்பட்ட பல தமிழ் உறவுகளின் நீண்டநாள் அரவணைப்பு என்பது எமக்கு மிக மிக மதிப்புமிக்கதாகும்.
இச்சேவையினை மேலும் தொடர்வதற்கு உந்துசக்தியாக, தமது ஏனைய வேலைபளுவிற்கு மத்தியிலும் இம்மையத்தில் இணைந்திருக்கும் சமூக நலங்கொண்ட நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எமது சிரந்தாழ்ந்த நன்றிகள் என்றுமே உரித்தாகும்.
Selvi Muthukumar
Coppell Tamil Education Center is an educational institution established to make Tamil learning accessible to everyone. The center continues to support the Tamil-speaking community in Dallas by enhancing their language proficiency. It has designed a curriculum that fosters children's intellectual and skill development.
The primary goal of the center is to provide opportunities for children to speak, read, and write Tamil while strengthening their language abilities. By explaining the richness and beauty of the Tamil language, it nurtures students' enthusiasm and engagement, ensuring a smooth and immersive learning experience.
The unwavering support from dedicated Tamil community members has been invaluable in the growth of Coppell Tamil Education Center.
We deeply appreciate all those who have contributed to this journey, including friends, parents, and volunteers who, despite their commitments, have joined hands with us for the welfare of the community. Your dedication and encouragement mean the world to us.